யாழில் கோர விபத்து : மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணம் - தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மீசாலை - புத்தூர் சந்தி பகுதியில் இன்று (06) செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் குறிப்பிடப்படுகின்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் 36 வயதான சோபிதா என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்