ஹவுதிகளுக்கு பேரிழப்பு : தலைமை தளபதியை சாய்த்தது இஸ்ரேல்
யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் தலைவர்களைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹவுதிகளின் தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில், படுகாயமடைந்த ஹவுதிகளின் தலைமைத் தளபதி மேஜர். ஜெனரல். முஹம்மது அப்துல் கரீம் அல் - கமாரி உயிரிழந்ததாக, இன்று (ஒக். 16) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா விதித்துள்ள முக்கிய பல தடை
யேமனில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் மேஜர். ஜெனரல். முஹம்மது அப்துல் கரீம் அல் - கமாரியின் மீது ஐ.நா. பல முக்கிய தடைகளை விதித்திருந்தது.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த ஓகஸ்ட் மாதம் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹவுதி அமைப்பின் பிரதமர் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
