ரஷ்ய - உக்ரைன் போருக்காக ஆட்கடத்தப்படும் இராணுவ வீரர்கள்...விசாரணையில் வெளியான உண்மை!
ரஷ்ய - உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கையின் பாதுகாப்புப் படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட்கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, ரஷ்ய - உக்ரைன் போருக்கு சம்பந்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அங்கத்தவர்கள் தொடர்பில், அவர்கள் சென்ற திகதிகள், அதனுடன் தொடர்புடைய நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் தொடர்பான தகவல்களை, வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குறித்த தகவல்களை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு தொலைபேசி எண் 0112 441 146 ஊடாக பெற்றுத்தருமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
விரிவான விசாரணை
இதேவேளை ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் குருநாகல், வெவரும பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகளின் பட்டியல்
இதன்போது இவர் இராணுவத் தலைமையகத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் பட்டியலை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலிப்படை முகாம்களுக்கு முன்னாள் இராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து காவல்துறையினர் தொடர்ந்தும் விழிப்புடன் விசாரணைகளை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு கூலிப்படைகளால் ஈர்க்கப்படுவது நாட்டின் படையினருக்கு இழுக்கு...சவேந்திர சில்வா சுட்டிக்காட்டு!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்