இலங்கை கிரிக்கெட் அணி தலைவிக்கு கிடைத்த உயரிய விருது...!
2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தெரிவாகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை, 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை அறிவித்துள்ளது.
கடந்த(2023) ஆண்டில் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனை, அணி என பல பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் அணியின் தலைவி
இதற்கமைய மகளிர் கிரிக்கெட்டில் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து ஒருநாள் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் போபியே சிட்டி ஹால் என் வீராங்கனையும் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஹேலே மேத்யூஸும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலியும் (இந்தியா), சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை உஸ்மான் கவாஜாவும் (அவுஸ்திரேலியா) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆடவர் கிரிக்கெட்
சிறந்த வளர்ந்து வரும் வீரராக ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த நடுவர் விருதை ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) வென்றுள்ளார். சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தெரிவாகியுள்ளார். சிறந்த ஆடவர் இணை கிரிக்கெட் வீரர் விருதுக்கு பஸ் டி லீடே (நெதர்லாந்து) தெரிவாகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |