உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பற்றுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பற்றுச்சீட்டுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் விரும்பிகள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை ஏதும் வெல்லாத நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இவ்வகையில் உலகக்கோப்பை தொடருக்கான பற்றுச்சீட்டு விற்பனை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அளவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை நிர்ணயம்

இதுதொடர்பாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களிடம் இருந்தும் பற்றுச்சீட்டு விலை நிர்ணயம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் பற்றுச்சீட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் மோதுகின்றன.
இவற்றில் 5 நாடுகள் ஆசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.