இலங்கை பொருளாதார மாற்றத்தில் தொடர் சிக்கலில் தவிக்கும் அநுர அரசு !
அந்நிய நாட்டின் முதலீடு இலங்கைக்கு வராவிட்டால் இலங்கை பொருளாதாரத்தில் மாற்றத்தை காண முடியாது என கொழும்பு (Colombo) பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் (K.Amirthalingam) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய நாடுகளை போல இலத்திரனியல் ஏற்றுமதிகளில் இலங்கை அதிகம் கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு ஏற்றுமதியை முழுமையாக மீள்கட்டமைப்பு செய்ய வேண்டும்.
நடைமுறைப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டமும் வறுமை போக்குவதற்கான வரவு செலவு திட்டமே தவிர வறுமானத்தை பெருவதற்காக முன்வைக்கப்பட்ட திட்டம் அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் மாற்றங்கள், நாட்டின் பொருளாதாரம், அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு மற்றும் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
