நாட்டில் பொருளாதார பிரச்சினையால் அதிகரிக்கும் மனநல நோயாளர்கள்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Beulah
நாட்டில் மனநல நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக காலி, கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், பொருளாதார பிரச்சினையினால் ஏற்பட்டுள்ள மனநல பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக, மனநலம் பாதிப்பு தொடர்பான வைத்தியர்களை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார பிரச்சினை

மேலும், பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.