நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்

By Sathangani Feb 29, 2024 07:35 AM GMT
Report

நாட்டில் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது 88 வீதமாகும் எனவும்  ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்து: 12 பேர் பலி

இந்தியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்து: 12 பேர் பலி

எச்.ஐ.வி பரிசோதனை அவசியம் 

மேலும், இந்தக் காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது 11.7 சதவீதமாகும். இதன்படி, சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டில், 607 புதிய எச்.ஐ.வி. நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர். இதேவேளை, ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானால், அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சுமார் எட்டு வருடங்கள் ஆகும் என ஜானகி விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எச்.ஐ.வி அறிகுறிகளுக்கு நிகரான அவதானங்கள் தென்பட்டால், எச்.ஐ.வி பரிசோதனை அவசியம் எனவும், அதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் தெரிவித்தார்.

இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு

இரட்டை சகோதரர்களை தகாத முறைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு

பரிசோதனைக் கருவிகள்

2025ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அதிக ஆபத்துள்ள குழுவிற்கு சிறப்பு திட்டம் செயற்படுத்தப்படும் எனவும்,  இதற்காக, சர்வதேச நிதியத்தின் கீழ் ஆதரவைப் பெறுவதற்கான செயற்திட்டம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள் | Increasing Number Of Hiv Patients In Sri Lanka

தற்போது, ​​அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யுமாறு நாங்கள் எப்போதும் அறிவுறுத்துகிறோம். சிலர் இதற்காக தயக்கம் காட்டுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

அவர்கள் தாங்களாகவே பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய சோதனைக் கருவிகளை ஒழுங்கு செய்து இலவச கூரியர் சேவை மூலம் பெறலாம். இதற்கு 'Know4Sure' செயலியைப் பயன்படுத்தி ஒழுங்கு செய்யுங்கள், பின்னர் உங்கள் வீட்டிற்கே இலவசமாக விநியோகம் செய்யப்படும் என  தெரிவித்திருந்தார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026