யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து

Sri Lanka Police Jaffna Accident
By Theepan Oct 27, 2026 09:15 AM GMT
Report

யாழ்ப்பாண நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், வைத்தியசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்புக் குறைபாடுகள், பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நகரை முறையான திட்டமிடலுடன் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதியும் சமுதாய மருத்துவத் துறைப் பேராசிரியருமான சுரேந்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (26.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2019 முதல் முன்னெடுக்கப்படும் ஆரோக்கிய நகரத் திட்டம் யாழ்ப்பாண நகரத்தை ஆரோக்கியமான நகரமாக மாற்றும் நோக்கில் 2019ஆம் ஆண்டு முதல் ‘ஆரோக்கிய நகரம்’ செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடம், யாழ்ப்பாண மாநகரசபை, மாவட்டச் செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியன இணைந்து இத்திட்டத்தில் செயற்பட்டு வருகின்றன.

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து | Increasing Traffic Congestion In Jaffna

எனினும், நகரை ஆரோக்கியமான பிராந்தியமாக மாற்றுவதற்குப் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்க்கமான முடிவுகளும் நடவடிக்கைகளும் இன்னும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை எனப் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

தீர்வின்றித் தொடரும் போக்குவரத்து நெரிசல் யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்ட தொலைதூரப் பேருந்து நிலையம், பல ஆண்டுகள் கடந்தும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் தரித்து நிற்காமை, புகையிரத நிலையங்கள் பொதுப் போக்குவரத்துடன் முறையாக இணைக்கப்படாமை போன்றவை நகரின் போக்குவரத்து முகாமைத்துவத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகளாக உள்ளன.

தொலைதூரப் பேருந்துகள் நகர மையத்துக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதுடன், நகருக்கு வெளியே அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

போர்குற்ற உண்மைகளை மூடிமறைக்கும் செம்மணி அறிக்கை! பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

வைத்தியசாலைகளில் உட்கட்டமைப்பு

அத்துடன், 1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நகருக்குள் அலுவலகங்களுக்குச் சென்று வரும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, முன்னர் நடைமுறையில் இருந்த உள்நாட்டுப் போக்குவரத்து மற்றும் சுற்றுவட்டப் போக்குவரத்து முறைகளை நவீன தேவைகளுக்கு ஏற்ப மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து | Increasing Traffic Congestion In Jaffna

வைத்தியசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் அவசியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் கீழ் நீண்ட காலத்துக்குப் பின்னர் எட்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் முதன்முறையாகப் பகல்நேரச் சிகிச்சைச் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் தெரிவித்தார்.

இருப்பினும், மரபணு ஆய்வுகூடங்களை விரிவுபடுத்துதல், நோயாளர்களைத் துரிதமாக வைத்தியசாலைக்குக் கொண்டுவந்து இறக்குதல், அவசர ஊர்திகள் தடையின்றிச் சென்று வருதல் உள்ளிட்ட தேவைகளுக்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் அவசியமாக உள்ளன.

வெளிநாட்டு வைத்தியசாலைகளில் காணப்படுவதைப் போன்று, அவசர சிகிச்சைப் பிரிவுகள், நோயாளர்களை இறக்கும் இடங்கள் மற்றும் வாகனத் தரிப்பிடங்கள் ஆகியவற்றை முறையாகத் திட்டமிட்டு அமைக்க வேண்டும். இதன்மூலம் நோயாளர்களுக்குத் தாமதமின்றிச் சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரிடர்களை எதிர்கொள்ளத் தயார்நிலை அவசியம் அதிக மக்கள் நெருக்கடியைக் கொண்ட யாழ்ப்பாண நகரில், பகல் வேளையில் எதிர்பாராத விபத்துகள் அல்லது பேரிடர்கள் ஏற்படும்போது அவற்றைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனப் பேராசிரியர் வலியுறுத்தினார்.

நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்

குறிப்பாக, தீயணைப்புப் பிரிவு உள்ளிட்ட அவசரகாலக் கட்டமைப்புகள் போதிய வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளனவா என்பதை ஆராய்ந்து, அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

யாழில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் - நகரை மறுசீரமைக்க வலியுறுத்து | Increasing Traffic Congestion In Jaffna

மேலும், நகரின் கால்வாய்கள் மற்றும் வடிகான்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் நகரை மேம்படுத்த முயற்சி ‘ஆரோக்கிய நகரம்’ திட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் தனியான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி நகரை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

தமிழர்களின் நீண்டகால இருப்பின் அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாண நகரத்தை ஆரோக்கியமானதாகவும், முறையான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டதாகவும் மாற்றுவதற்குப் பொதுமக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் துறையினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனப் பேராசிரியர் சுரேந்திரகுமாரன் வலியுறுத்தினார்.

இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்!

இலங்கையில் தனிநபரின் கைத்தொலைபேசியை பரிசோதிக்க காவல்துறைக்கு பூரண அதிகாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026