இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ரோகித் சர்மா
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வென்றதன் மூலம் டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று(11) மொகாலியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 158 ஓட்டங்கள் பெற்றது.
இந்திய அணி
பின்னர் 159 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்கள் குவித்தார்.
சாதனை படைத்த ரோகித்
சுமார் 14 மாதங்களுக்கு பின்னர் ரோகித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடினார்.
எனினும் 2வது பந்திலேயே ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |