இந்தியா சுற்றுப்பயணம் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!
இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்தியாவிற்கு பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் Pravasi Bharatiya Divas Reel Contest 2027 அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு
இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி இரவு 11.59 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் எவ்வித கட்டணமுமின்றி பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Your reel could win you a 10-day trip to India! 🇮🇳 Participate in the PBD Reel Contest 2027 on BharatVerse app and showcase your connection with India through a reel on ‘What India means to me’. 📅 Entries open until 20 December 2026. Check the participation rules below and let your story be heard!
— Randhir Jaiswal (@MEAIndia) November 26, 2026
இதில் பங்கேற்க விரும்புவோர், BharatVerse செயலியில் பதிவு செய்து இந்தியா எனக்கு என்ன அர்த்தம் தருகிறது (What India means to me) எனும் தொனிப்பொருளில் அதிகபட்சம் 30 வினாடிகள் கொண்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reel) காணொளியொன்றை உருவாக்க வேண்டும்.
குறித்த காணொளியை #IndiaInMe என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றி @bharatversequiz கணக்கை Collaborator ஆக இணைப்பதன் மூலம் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |