இலங்கையின் நிலைமை - இந்தியாவிலிருந்து வெளிப்பட்ட கவலை
இலங்கையின் நிலைமை - இந்தியாவிற்கு ஏற்பட்ட கவலை
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா கவலையடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்கான வசதிகளை இந்தியா ஒருபோதும் வழங்கவில்லை என கலாநிதி ஜெய்சங்கர் கூறியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்றதொரு நெருக்கடி இந்தியாவில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும் ஏற்படவுள்ள பாதிப்பு
இலங்கையின் அண்டை நாடாக இந்தியா இருப்பதால், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்தியா எப்படி பாதிக்கப்படுமோ என்ற கவலை இந்தியாவுக்கு உள்ளதாக கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மற்ற நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி
தவறான ஒப்பீடுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர் என்று அவர் கூறினார்.
இந்திய அதிமுக கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, திலகனா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டன.