இந்திய விமானங்களில் தொடரும் கோளாறு :நடுவானில் ஏற்படவிருந்த பாரிய விபத்து
கொல்கத்தாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பெங்களூருக்குத் திரும்பியது.
“பெங்களூரிலிருந்து வந்த எங்கள் விமானங்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து விமான நிலையத்திற்குத் திரும்பியது. பாதுகாப்பான, முன்னெச்சரிக்கை தரையிறக்கத்தை மேற்கொள்வதற்கு முன்பு எரிபொருள் மற்றும் எடையைக் குறைக்க விமானம் வட்டமிட்டது,” என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மாற்று விமானம் ஏற்பாடு
பயணிகளை கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து விமான நிறுவனம் விசாரித்து வருகிறது.விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கரப்பான் பூச்சிகள் தொல்லை
இதேவேளை நடுவானில் பறந்து கொண்டிருந்த மற்றுமொரு ஏர் இந்தியா விமானத்தின் உள்ளே கரப்பான் பூச்சிகள் இருந்ததால் பயணிகள் அலறினர். இந்த சம்பவத்திற்கு விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
