இந்திய மீனவர்களை ஆயுதங்கள் மூலம் அடக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்!
இலங்கை சிறிய நாடு என்பதற்காக இந்தியா செய்வதையெல்லாம் எம்மால் அமைதியாக வெடிக்க பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே எமது கடற்படைக்கு ஆயுதம் வழங்கியேனும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் வடக்கின் கடலை அழித்துக்கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கில் அவர்களின் ஆக்கிரமிப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, சமூக காவல்துறை சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நாகதீபம் பக்கம் சென்றால் இவற்றை எம்மால் அவதானிக்க முடியும். இந்த செயற்பாடுகளை நிறுத்தியாக வேண்டும். அதற்கான அனுமதியை எமது கடற்படைக்கு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மீனவர்கள் எமது மீனவர்களை தாக்குவதும், பீன்பிடி உபகரணங்களை அழிக்கின்றனர் என்றால் அந்த அசம்பாவிதங்களை நிறுத்த வேண்டும். பெரிய நாடுகளுக்கும் கடமைகள் உள்ளன.
சிறிய நாடாகிய எமது நாட்டை பெரிய நாடுகள் அடக்காது, அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாது இருக்க தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே எமது கடற்படைக்கு ஆயுதம் வழங்கியேனும் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.