இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா : எச்சரிக்கையாக இருப்பதாக இலங்கை தெரிவிப்பு!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றின் மற்றுமொரு திரிபு வேகமாக பரவி வரும் நிலையில், இது தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றின் இலங்கைக்கான ஆபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர். அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இலகுவில் அடையாளம் காண முடியாத கொரோனா வைரசின் புதியதொரு திரிபு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையுடன் செயல்படும் இலங்கை
இந்தியாவின் இந்த நிலை இலங்கையை பாதிக்கும் என்ற அச்சம் காணப்படுவதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டி உள்ளதாக அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் 48 மணித்தியாலங்களிற்கு மேல் தென்பட்டால், பொது மக்கள் உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், தொற்று பரவல் ஆபத்தை தவிர்ப்பதற்காக முகக்கவசங்களை அணிய வேண்டுமெனவும் தேவையெற்படின் உடனடி மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |