இருதரப்பு உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோருக்க இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஆதரவு

அதன் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நல்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நட்புறவின் பேணலை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இது நாளுக்கு நாள் வலுப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சிறிலங்கா விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றைய தினம் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
