உலக எண்ணெய் சந்தை பதற்றத்தில்: அமெரிக்காவிடம் இந்தியாவின் அவசர கோரிக்கை
ஈரான் (Iran) மற்றும் வெனிசுலா (Venezuela) நாடுகளிடம் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவிடம் (America) இந்தியா (India) கோரிக்கை விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில், ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா கோரிக்கை
அண்மையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்காவிடம் இந்தியா அனுமதி கோரியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஒரே நேரத்தில் ரஷ்யா (Russia), ஈரான் மற்றும் வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் உலகளாவிய எண்ணெய் விலையில் பாரிய மாற்றம் ஏற்படும் என இந்திய பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
