இந்தியாவுடனான உறவை மதிக்கிறோம்! இலங்கை அறிவிப்பு
srilanka
dr-ramesh pathirana
By Vasanth
இந்தியாவுடனான நெருங்கிய உறவுகளை மதிப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்த விடயத்திலும் அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேற்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு முனையம் மூலோபாய ரீதியில் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தினால் இதனை அபிவிருத்தி செய்யும் பணிகளை வேறும் தரப்பினருக்கு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்தது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி