உலகின் மிகப்பெரிய கருப்பு தேயிலை உற்பத்தி : தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்தியா
உலகின் மிகப்பெரிய கருப்பு தேயிலை உற்பத்தியாளராக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது
உலகின் மிகப்பெரிய கருப்பு தேயிலை உற்பத்தியாளராகவும், உலகளவில் மூன்றாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராகவும் இந்தியா தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2025-26 நிதியாண்டில் இந்தியா 282.11 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்து, மொத்த ஏற்றுமதி வருவாயாக 988.13 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
தேயிலைதுறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இந்திய தேயிலை சபை ஏற்பாடு செய்திருந்த தேயிலைத் துறை சார்ந்தோரின் கூட்டத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

தேயிலைத் தொழிலுக்குப் புத்துயிர் அளிப்பது, தேயிலை ஏல முறையை வேகமாகவும் வலுவாகவும் மாற்றுவது, தேயிலை ஆராய்ச்சியை வலுப்படுத்துவது, தரத்தை மேம்படுத்துவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது, தேயிலைத் தொழிலாளர்களின் நலன் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம், அதிக வெளிப்படைத்தன்மை, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பரிவர்த்தனைகளில் எழும் சிரமங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் மீதும் இந்த விவாதம் விரிவாக கவனம் செலுத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |