ஓய்வு பெறுகிறது MiG-21 எனப்படும் பறக்கும் சவப்பெட்டி
இந்திய விமானப் படையில் கடந்த பல தசாப்தங்களாக பெரும் பங்கு வகித்த MiG-21 வகை போர் விமானம் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட இந்த வகை விமானம் பறக்கும் சவப்பெட்டி என்ற விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்தது.
இந்த நிலையில் ஒரு பறவை வானத்தை நேசிப்பது போல் MiG-21 இல் பறப்பது தனக்கு மிகவும் பிடிக்கும். சண்டையில் அது தன்னைப் பாதுகாக்கும். இவ்வாறு பறந்து வரும் போது புத்திசாலித்தனமான பறவை தப்பிச் செல்வது போல் தான் MiG-21 இருந்ததாக ஓய்வுபெற்ற எயார் மார்சல் ஒருவர் தெரிவித்திருந்தார்.
மிகப் பிரபலமான போர் விமானம்
1960 விமானப் படையில் சேர்ந்நத இவர் 1966 இல் MiG-21 விமானத்தை இயக்க தொடங்கிய அவர் அடுத்த 26 ஆண்டுகளுக்கு அதனை ஓட்டினார்.
இந்தியாவின் மிகப் பிரபலமான போர் விமானமான இது ஒரு கட்டத்தில் இந்திய விமானப் படையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் போற்றுதலுக்குரிய இந்த விமானம் பிற்காலத்தில் விமர்சனங்களைச் சந்தித்தது. தொடர்ச்சியான கொடிய விபத்துக்களால் பறக்கும் சவப்பெட்டி என்ற பெயரையும் பெற்றது.
1966 மற்றும் 1980இற்கு இடையில் இந்தியா பல்வேறு வடிவங்களில் 872 MiG போர் விமானங்களை வாங்கியது.
1971, 1982 மற்றும் ஏப்ரல் 2012 இற்கு இடையில் 482 MiG விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 171 விமானிகள், 39 பொது மக்கள், 08 சேவை ஊழியர்கள் மற்றும் ஒரு விமானக் குழுவினர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் மனித தவறு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளால் ஏற்பட்டதாக தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் முக்கிய தூண்
MiG-21 தனித்துவமான பாரம்பரியங்களைக் கொண்டுள்ளதுடன் இந்திய விமானப் படையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்திய விமானப் படையின் முக்கிய தூணாக இருந்தது.
1965 பாகிஸ்தான் போருக்கு பிறகு இந்தியாவின் அனைத்து மோதல்களிலும் பங்காற்றியதாக புவிசார் அரசியல் சிக்கல் நிறுவனத்தின் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியனால் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம் 1963 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஊசியான மூக்கு போன்ற அமைப்பு மற்றும் மெல்லிய உருவம் கொண்ட இந்த விமானம் உயரத்தில் அதிவேகமாக பறக்கும் திறன் கொண்டதுடன் வானத்தில் அதிவேகமாக மேலெழும் திறன் கொண்டது.
காலாவதியான தொழில்நுட்பம் மற்றும் அதிக பராமரிப்பு தேவைபடுவதால் MiG-21 கைவிடப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
