சிறிலங்கா இராணுவத்துக்கு வள்ளலாக மாறிய இந்திய தளபதி!
அமெரிக்காவின் அண்மைய வெனிசுலா மீதான அதிர்வுக்குப் பின்னர் முன்னர் அதனுடன் முறுகிய தென்னெமரிக்க நாடுகளில் ஒரு புதிய வழமை சமரச நிலை தெரிகிறது.
அந்தவகையில் , வெனிசுலாவின் புதிய தலைமை தமது நாட்டுடன் ஒத்துழைப்பதான அறிவிப்பு அமெரிக்காவிடம் இருந்து வந்துள்ளது இதேபோல கடந்த சனிக்கிழமை, மதுரோ பிடிக்கபட்ட பின்னர் முடியுமானால் அமெரிக்கா தன்னைக் கைதுசெய்து பார்க்கட்டும் சூளுரைத்த கொலம்பிய அரசதலைவர் குஸ்டாவோ பெட்ரோவும் நேற்று அமெரிக்க டொனால்ட் டிரம்புடன் பம்மிப்பதுங்கி பேசி எதிர்வரும் வாரங்களில் வெள்ளை மாளிக்கு செல்வதற்கும் அழைப்பபை பெற்றுவிட்டார்.
ஆகமொத்தம் ட்ரம்ப் உருவாக்கும் அமெரிக்காவுக்குரிய புதிய தேசிய பாதுகாப்பு யுக்தியை மையப்படுத்தி புதிய வழமை ஒன்று தொடாப்போவது தெரியும் நிலையில் வந்துவிட்டது.
இதேபோல இலங்கையிலும் பருவநிலை தாக்கங்களிலும் ஒரு வழமை நிலைக்குரிய கண்டங்களை இனிமேல் எதிர்நோக்கவேண்டிய மக்களாக இலங்கையர்கள் மாறும் அறிகுறிகளை தொடரும் வானிலை குழப்பங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்த நிலையில் தித்வா சூறாவளியின் பின்னரான ஒபரேஷனான சாகர் பந்துவில் சிறிலங்கா ராணுவத்துக்கு என தனியாக நிவாரணம் எதுவும் வழங்கப்படாத குறையை தீர்க்கவோ என்னவோ இந்திய இராணுவத்தளபதி தனது இலங்கை பயணத்தில் சிறிலங்கா படைத்துறைக்கு 20 ஸ்கோர்பியோ ரக வாகனங்கள், நோயாளர் காவுவண்டிகள் மற்றும் இராணுப்பயிற்சி சிமுலேட்டர்கருவிகன் போன்ற பரிசுகளை வழங்கியுள்ளார்.
ஒரு காலத்தில் இந்திய எதிர்ப்பையே தமது முன்னணி கொள்கையாக வரிந்து கட்டிய அதே ஜேவிபியின்; மரபணு ஆட்சியில் இந்த மாற்றங்கள் வரும் நிலையில் இந்த விடயங்களுடன் வருகிறது செய்திவீச்சு....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |