அதிபர் ரணில் தலைமையில்10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Ceylon Workers Congress Ranil Wickremesinghe Narendra Modi Jeevan Thondaman India
By Shadhu Shanker Oct 11, 2023 03:22 PM GMT
Report

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தமானது இன்று (11) அதிபர் செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று (11) முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.

அதிபர் ரணில் தலைமையில்10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து | Indian External Affairs Minister S Jaishankar

சூம் தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!

சூம் தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!

10 ஆயிரம் வீட்டு திட்டம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியா சார்பில் கையொப்பமிட்டார்.

அதிபர் ரணில் தலைமையில்10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து | Indian External Affairs Minister S Jaishankar

யாழில் ஹரிஹரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி : அனுமதி இலவசம்

யாழில் ஹரிஹரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி : அனுமதி இலவசம்

அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலேயே மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்திய அரசால் மலையகத்தில் ஏற்கனவே 4 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் மோடி, மலையகம் வந்திருந்தவேளை 10 ஆயிரம் வீடுகளுக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

முன்னர் வீடொன்றுக்கு 10 இலட்சம் ரூபா உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் வீடொன்றுக்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் தலைமையில்10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து | Indian External Affairs Minister S Jaishankar

புள்ளிச்சுறா மீனொன்று வலையில் சிக்குண்டு உயிரிழப்பு

புள்ளிச்சுறா மீனொன்று வலையில் சிக்குண்டு உயிரிழப்பு

இந்நிகழ்வில் 

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரன், அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபரின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, அதிபரின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, அதிபரின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, அதிபரின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி என பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.

வன்னி பிரதி காவல்துறைமா அதிபராக விஜயசேகர நியமனம்

வன்னி பிரதி காவல்துறைமா அதிபராக விஜயசேகர நியமனம்



ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026