ஆபிரிக்க பெண்களால் நெதர்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியப்பெண்
நெதர்லாந்திலுள்ள கடையொன்றின் முன்னால் வைத்து இந்தியப் பெண் ஒருவர் ஆபிரிக்க பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி அனைவர் மத்தியிலும் பாரிய கண்டனங்களையும் பெற்று வருகிறது.
இந்தியப் பெண் ஒருவருக்கும் ஆபிரிக்கப் பெண் ஒருவரிற்கும் இடையே ஆரம்பமான வாக்குவாதம் நேரம் செல்ல வலுத்ததன் காரணத்தால் பிரச்சினை கைகலப்பில் சென்று முடிந்ததை காணொளியில் காண முடிகிறது.
நியூசிலாந்திற்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்திற்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லை - குஷானி ரோஹனதீர
காணொளி எடுத்துள்ளனர்
இதில் இந்தியப் பெண்ணின் கையிலிருந்த கருப்பு நிற கைப்பையினை ஆபிரிக்கப் பெண் இழுக்க முயன்ற போது, இந்தியப் பெண் அதனை தடுப்பதனையும் அந்த வேளை ஆபிரிக்க பெண் அவரது கூந்தலைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குவதையும் காணொளியில் காணக்கூடியதாக உள்ளது.
An INNOCENT Indian student mobbed by African people (Black people), gets robbed and beaten by the crowd. War between immigrants. ATROCIOUS pic.twitter.com/n1jiN7J9pK
— Epic Rage Fights (@epic_rage_fight) September 6, 2023
குறித்த இந்தியப் பெண்ணை அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும் தாக்குகின்ற போது, சுற்றியிருந்தோர் குறித்த பிரச்சினையை தடுக்காமல் இருந்தது மாத்திரமல்லாமல், ஆபிரிக்க பெண்ணுடன் இருந்த மற்ற பெண்களும் இவருடன் சேர்ந்து இந்தியப்பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மேலும் பலர் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் காணொளி எடுத்தும் உள்ளனர்.
இந்நிலையில், சண்டைக்கான சரியான காரணம் இதுவரை தெளிவாக தெரிவிக்கப்படாது இருப்பதும், இதுதொடர்பான காணொளி அனைவர் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.