அத்துமீறிய சீன விமானங்களை விரட்டியடித்த இந்திய விமானங்கள் -எல்லையில் தொடரும் பதற்றம்
China
India
Indian Army
By Sumithiran
அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் எல்லையில் சீன இராணுவத்தினரின் அத்துமீறலை தொடர்ந்து, இந்திய விமானப்படை தனது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
சீன போர் விமானங்கள் எல்லைப்பகுதியில் சுற்றி வருவதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சீனாவின் ஊடுருவல்களை முறியடிக்கும் வகையில், இந்தியாவும் தனது கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
இதன்படி எல்லையருகே வந்த சீனாவின் போர் விமானங்களை 3 முறை துரத்தி அடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை அருணாச்சல் எல்லையில் இந்திய - சீன ,ராணுவத்தினரிடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.