அவசர அவசரமாக இந்தியாவுக்கு சென்ற பிரித்தானிய அதிகாரிகள்! பின்னணியில் அரசியல் நோக்கம்
பிரித்தானிய அதிகாரிகள் சிலர் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தலைமையில் அவசரமாக இந்தியாவுக்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன.
1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வது, பொருளாதார ரீதியில் நன்மை பயக்கும் விடயம் என பிரித்தானியா கருதுகிறது.
அதற்காக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது 14ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்
இந்நிலையில், நேற்று, அதாவது, மார்ச் மாதம் 4ஆம் திகதி, மூத்த அரச அதிகாரி ஒருவர் தலைமையில், பிரித்தானிய அதிகாரிகள் சிலர் அவசரமாக இந்தியாவுக்குப் சென்றுள்ளார். தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை எப்படியாவது விரைந்து முடிக்கவேண்டும் என பிரித்தானியா விரும்புகிறது.
அதற்குக் காரணம் என்னவென்றால், இரண்டு நாடுகளிலுமே பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இந்தியாவில், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. பிரித்தானியாவிலும் இந்த வசந்த காலம் அல்லது இலையுதிர் காலத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
பிரித்தானியாவின் லேபர் கட்சி
கருத்துக்கணிப்புகளின்படி பிரித்தானியாவில் தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவைப் பொருத்தவரை, லேபர் கட்சியுடனான ஒப்பந்தத்தால் தங்களுக்குக் கூடுதல் பயன் கிடைக்கும் என இந்தியா கருதுகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்டால், அதற்குப் பிறகு பிரித்தானியாவுடன் இந்தியா பேச்சுவார்த்தைகள் நடத்தமுடியாது.
எனவேதான், பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரின் ஆட்சியின்போதே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றும் முயற்சியில், பிரித்தானிய அதிகாரிகள் அவசரமாக இந்தியாவுக்குப் பறந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |