இந்திய இழுவைப்படகு அடாவடி : யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம்

Sri Lanka India Sri Lanka Fisherman
By Shalini Balachandran Jan 09, 2025 09:32 AM GMT
Report

இந்திய (India) இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி கடற்றொழிலாளர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு (08) குறித்த கடற்றொழிலாளர்கள் திருவடிநிலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகள் அவரது வலைகளை அறுத்துள்ளன.

இதனால் அவரிடம் இருந்து 32 வலைகளில் 26 வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் ஆறு வலைகளே மீதமாகின எஞ்சிய வலைகளும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்

இது குறித்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நேற்றிரவு (08) பத்து மணியளவில் அசத்துமீறி கடற்றொழில் ஈடுபட்ட ரோலர்கள் எமது வலையை மட்டுமல்லாமல் வேறு சங்கங்களின் வலைகளையும் அறுத்துள்ளன.

இப்பொழுது கடற்றொழில் பருவகாலம், இந்திய இழுவை படகுகளின் இவ்வாறான செயற்பாடுகளால் நாங்கள் உழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய இழுவைப்படகு அடாவடி : யாழ். சுழிபுரம் கடற்றொழிலாளர்களின் வலைகள் நாசம் | Indian Trawlers Illegally Entering Sri Lanka

ஏழு இலட்சம் ரூபா வங்கியில் கடன் பெற்றே இந்த வலை முதல்களை உருவாக்கி கடலில் தொழில் செய்தேன். எனது வலைகளை இந்தியன் இழுவைப் படகு அறுத்துச் சென்றதால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வேன், வங்கி கடனை செலுத்த என்ன செய்வேன் என்று தெரியாமல் தவிக்கின்றேன்.

புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கின்றார் அதுபோல இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையையும் தீர்த்து வையுங்கள்.

புதிதாக வந்த அமைச்சர் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் அரசாங்கம் எனக்கு இழப்பீடாடினை வழங்கி, நான் மீண்டும் தொழில் செய்ய வழிவகுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது நினைவேந்தல்

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது நினைவேந்தல்

You may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026