ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, மகேன் கோபல்லாவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டன.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இம்மனுக்களை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

இதேவேளை தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |