லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்தியர்
By Pavan
லண்டனின் சவுத்ஆம்டன்வெ பகுதியில் இந்திய வம்சாவளி இளைஞரொருவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான இளைஞரே இவ்வாறு கத்தியால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது

சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அவருடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சலீம் என்பவர் அரவிந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரை கைது செய்த லண்டன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்