கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்
Port of Colombo
Sri Lanka Navy
By Jaso
இந்திய(india) கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் வேலா’ (‘INS Vela’) என்ற நீர்மூழ்கிக் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் 67.5 மீட்டர் நீளம் கொண்டதுடன், 53 கடற்படையினருடன் நாட்டை வந்தடைந்தது.
சிறிலங்கா கடற்படையின் ஏற்பாடு
நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காகவும், சிறிலங்கா கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில், பங்கேற்க உள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் வருகை தந்த கடற்படையினர் நாட்டின்பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
