சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்ணால் காணலாம்: நாசா அறிவிப்பு
சென்னையில் (chennai) இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை (International Space Station) வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா (nasa) அறிவித்துள்ளது.
இந்நிகழ்வு இன்று (10) இரவு 7.09 மணியில் இருந்து சுமார் 7 நிமிடங்களுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் சூழலில், அங்கே விண்வெளி நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
வெறும் கண்ணால் பார்க்கலாம்
இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது பூமியை சீரான வேகத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறது.
ஆராய்ச்சிக்காக செல்லும் விண்வெளி வீரர்கள் வாழவும், பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய இடமாக இந்த விண்வெளி மையம் உள்ளது.
இந்த சர்வதேச மையத்தை சென்னைவாசிகள் இன்று மாலை வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.
மேலும் சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |