அதிபர் நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்
Sri Lanka
Sri Lankan Peoples
President of Sri lanka
By Sathangani
சிறிலங்கா அதிபர் நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்று (13) அதிபர் செயலகத்தில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இது ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம், அதிபர் நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதிய தகவல்களை மும்மொழிகளிலும் பொதுமக்கள் பெறமுடியும்.
மருத்துவ உதவி
அத்துடன் மருத்துவ உதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.
இந்நிகழ்வில் அதிபரின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் அதிபர் நிதியத்தின் செயலாளருமான சரத் குமார, அதிபர் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கயான் மொரலியகே மற்றும் அதிபர் நிதியத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.பொதேஜு ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி