பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்

Nawaz Sharif Prime minister Pakistan
By Sathangani Feb 14, 2024 08:51 AM GMT
Report

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பையும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக தனது மகளான மரியம் நவாசையும் நியமனம் செய்வதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ - சர்தாரி பிரதமர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பரபரப்பான பொதுத்தேர்தல் நடந்து முடிந்து 5 நாட்களுக்கு பிறகும், அங்கு எந்தக் கட்சி ஆட்சி அமைக்க போகிறது, அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என்பது இன்னும் பெரிய குழப்பமாகவே உள்ளது.

உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்! உறுதியளித்தது இந்திய அரசு

உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்! உறுதியளித்தது இந்திய அரசு

சிறையில் அடைக்கப்பட்ட  இம்ரான்கான்

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டு, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்ட 101 வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் | Shehbaz Sharif To Be The Next Pakistan Pm

3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களில் வெற்றிபெற்று 2ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அக்கட்சி பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த இராணுவத்தின் ஆதரவைக் கொண்டுள்ளது.

பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்று 3ஆவது இடத்தில் உள்ளதுடன் எஞ்சிய இடங்களை சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன.

ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி அரசை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவில் காட்டுயானை தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்!

கூட்டணி அரசை அமைத்தல்

ஆனால் இதில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடந்த நாளில் இருந்து 3 வாரங்களுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் அரசியல் சாசனம் கூறுகிறது.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் | Shehbaz Sharif To Be The Next Pakistan Pm

எனவே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

எனினும் பிரதமர் பதவி யாருக்கு என்பதில் இருக்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

நெல்லுக்கான விலையின்மையால் நஷ்டத்தில் கிண்ணியா விவசாயிகள்

நெல்லுக்கான விலையின்மையால் நஷ்டத்தில் கிண்ணியா விவசாயிகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமர்

4ஆவது முறையாக பிரதமராக வேண்டும் என்பதில் நவாஸ் ஷெரீப்பும், பிலாவல் பூட்டோ சர்தாரியை பிரதமராக்கியே தீருவேன் என்பதில் அவரது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரியும் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் | Shehbaz Sharif To Be The Next Pakistan Pm

பிரதமர் பதவியை தவிர்த்து, வெளியுறவு மந்திரி, உள்துறை மந்திரி, நிதி மந்திரி மற்றும் பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாபின் முதல் - மந்திரி போன்ற முக்கிய பதவிகளுக்கு யார் பரிந்துரைக்கப்படுவார்கள் என்பதிலும் இரு கட்சிகள் இடையே வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பையும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக தனது மகளான மரியம் நவாசையும் நியமனம் செய்வதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி பிரதமர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தின் குறைபாடுகள் : ரணிலிடம் சமந்தா பவர் கோரிக்கை

இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தின் குறைபாடுகள் : ரணிலிடம் சமந்தா பவர் கோரிக்கை

தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி

புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமல் நவாசுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார். நவாஸ் ஷெரீப்புக்கு ஆதரவளித்த பிலாவல் மற்றும் அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி ஆகியோருக்கு ஷெபாஸ் நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப் | Shehbaz Sharif To Be The Next Pakistan Pm

கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. இதனிடையே பிலாவல் தனது தந்தை ஆசிப் அலி சர்தாரியை மீண்டும் அதிபராக பார்க்க விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் பாகிஸ்தானில் எந்த முக்கிய அரசியல் கட்சிகளுடனும் கூட்டணி ஆட்சி அமைக்கும் யோசனையை இம்ரான் கான் நிராகரித்தார்.

மேலும் சிறிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி, பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் எதிர்க்கட்சியாக இருப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ள 5 நாடுகள்!

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ள 5 நாடுகள்!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்