நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பம்
நாட்டில் 2009 ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது முதற்கட்டப் பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆணைக்குழுவின் அலுவலகம் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 12, நீதிமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணைக்குழு கோரிக்கை
கடந்த 17 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி, மின் உற்பத்தி மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் குறித்து சந்தேகிக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இந்த ஆணையம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தகவல்கள் அல்லது ஆதாரங்கள் கிடைக்கபெற்றால், அவற்றை எதிர்வரும் மே 22 ஆம் திகதிக்கு முன்னர் தங்களிடம் சமர்ப்பிக்குமாறு விசாரணை ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |