கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அடிப்படை உரிமைகள் (FR) மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
2022 மே 9 அன்று அரகாலய போராட்டக்களத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த போராட்டத்தின் பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்தது.
இதன்போது தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இழப்பீட்டு நிதியை மீட்பதற்கான உத்தரவைக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சட்டவிரோத இழப்பீடு
அத்தகைய இழப்பீடு வழங்குவது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின்போது உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |