ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்..!
ஆர்சிபி அணியின் சகலதுறை ஆட்டகாரர் மேக்ஸ்வெல் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது.
மேக்ஸ்வெல் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார்.
மேக்ஸ்வெல் விலகல்
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத வேகத்தில் சதம் அடித்துள்ளார்.
ஆனால் ஆர்சிபி அணியைப் பொறுத்தவரை, இந்த ஐபிஎல் சீசனில் கிளென் மேக்ஸ்வெல் சிறப்பான ஓட்டங்களை எடுக்கவில்லை.
அவர் இந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 5.33 என்ற மோசமான சராசரியில் உள்ளார்.
ஆர்சிபி அணி
மேலும், 3 முறை டக் ஆகியுள்ளதுடன் அதிகபட்சமாக 28 ஓட்டங்களே பெற்றுள்ளார். 94.12 ஸ்டிரைக் ரேட்டிலும் மொத்தமாவே வெறும் 32 ஓட்டங்களே இந்த ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளார்.
இதேவேளை, ஆர்சிபி அணியானது பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மற்ற எல்லா ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததுள்ளதுடன் புள்ளிப்பட்டியலில் 10 அணிகளில் 9வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில்அடுத்த ஆட்டத்திற்கு மேக்ஸ்வெல் இல்லை என்றால், மற்றொரு சகலதுறை ஆட்டகாரர் கேமரூன் கிரீன் அணியில் இடம்பிடிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |