ட்ரம்பின் கொள்கைகளைச் செயற்படுத்தும் கருவியாக ஈராக்: ஈரான் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளைச் செயற்படுத்தும் கருவியாக ஈராக் மாறிவிடக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனியின் ஆலோசகர் மொஹமட் மொக்பர் (Mohammad Mokhber) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுவான விதி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
அயல்நாடுகளுடன் பொதுவான விதியைப் பகிர்ந்து கொள்வது ஈரானின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கை.
மிகக் கடினமான நாட்களில் ஈராக் மக்களுடன் ஈரான் முழு பலத்துடன் நின்று தனது நட்பை நிரூபித்தது.
در هندسه سیاست خارجی ما، هم سرنوشتی با همسایگان اصل اساسی است. ایران در سختترین روزها با تمام توان کنار ملت عراق ماند و دوستی خود را اثبات کرد. این پیوند ناگسستنی ایجاب میکند بغداد در موضوع مرزها هوشیار باشد تا ابزار دست دشمنان اسلام و اجابت سیاست های ترامپ جنایتکار تبدیل نشود.
— محمد مخبر (@MokhberOfficial) November 28, 2026
இந்த உடைக்க முடியாத பிணைப்பு, இஸ்லாத்தின் எதிரிகளின் கைகளில் கருவியாகவோ குற்றவாளியான ட்ரம்பின் கொள்கைகளைச் செயற்படுத்தும் சாதனமாகவோ மாறாத வகையில் எல்லை விவகாரங்களில் பாக்தாத் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் கோருகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் எண்ணெய் கடத்தல் விவகாரங்களில் பாக்தாத் - வாஷிங்டன் நெருக்கம் அதிகரித்து வருவதன் அடிப்படையில் அயல்நாட்டு உறவுகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து ஈரான் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெனிக் பார்ம் அகதி முகாமிலிருந்த சிறுமி மீதான அத்துமீறல்: இந்து மதகுருவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |