வெற்றியை அறிவித்தது ஈரான்! பின்வாங்கிய அமெரிக்கா - நிறுத்தப்படும் இஸ்ரேலிய தாக்குதல்கள்
இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் சம்மதித்துள்ள நிலையில், அதனை ஈரான் தங்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அறிவித்துள்ளது.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஈரானுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளது.
பின்வாங்கிய அமெரிக்கா
அமெரிக்காவைத் தங்களது 10 அம்சத் திட்டத்தை ஏற்க வைத்ததன் மூலம் அமெரிக்கா பின்வாங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அத்தோடு, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், தங்களது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் நிலைக்குத் தள்ளியிருப்பதாக ஈரான் கொண்டாடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிறுத்தப்படும் இஸ்ரேல் தாக்குதல்கள்
ஈரான் மீதான மிகப்பாரிய இராணுவத் தாக்குதலுக்கு ட்ரம்ப் விதித்திருந்த இரவு 8 மணி காலக்கெடு முடிவடைய ஒன்றரை மணிநேரம் மட்டுமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image Credit: ABC News
மேலும், ட்ரம்ப் அறிவித்த இந்த இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் இஸ்ரேலும் தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நிறுத்தி வைக்கச் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |