மீண்டும் ஈரானில் இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி இருவரை ஈரான் தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகள் இணைந்து கடந்த வருடம் அணு ஆயுதம் செறிவூட்டும் ஆலை மீது தாக்குதல் நடத்தின . கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின .
இந்த போரில் இஸ்ரேலுக்கு பலர் உளவாளியாக செயல்பட்டதாக ஈரான் சந்தேகித்தது. அதன்அடிப்படையில் பலரை கைது செய்து தண்டித்து வருகிறது.
மொசாட் அமைப்புக்கு முக்கிய தகவல்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு
அந்த வகையில் உளவு பார்த்ததாக யாகோப் கரிம்போர் மற்றும நாசர் பெக்ர்ஸாதே ஆகியோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

யாகோப் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை அமைப்புக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
பெக்ர்ஸாதே அரசாங்கம் மற்றும் மதத் தலைவர்கள் குறித்தும், நடான்ஸ் (அணுசக்தி திட்டம் இருக்கும் இடம்) குறித்தும் தகவல் அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் உச்சநீதிமன்றம் இருவரிடன் தண்டனையை உறுதி செய்த நிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |