பாகிஸ்தான் செல்கிறார் ஈரான் அதிபர்
Pakistan
Iran
By Sumithiran
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் நாளை திங்கள் பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை வரை அவர் பாகிஸ்தானில் தங்கியிருப்பார் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு
இந்த பயணத்தின் போது, ரைசி பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமர், செனட் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்திப்பார் என்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |