ஹோர்முஸில் அமைதி திரும்பும் வரை தாக்குதல்கள் தொடரும்! ஈரான் திட்டவட்டம்
தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் ஜலசந்தியிலும் அமைதி திரும்பும் வரை ஈரானியத் தாக்குதல்கள் தொடரும் என்று ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் படைத் தளபதி சையத் மஜித் மூசாவி, கூறியுள்ளார்.
கணக்கீட்டு முறையில், ஈரானின் தலைநகரம் முதல் தெற்கு வரையிலான அனைத்தும் ஈரானின் முழுப் பகுதி என்பதை அமெரிக்க விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்குக் கடற்கரையிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் அமைதி திரும்பும் வரை, ஈரான் முழுவதிலிருந்தும் எதிரிக்கு எதிரான திறமையான மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தாக்குதலின் நோக்கம்
ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக ஆறாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியபோது, பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியது.

இந்தத் தாக்குதல்கள், ஈரானின் இராணுவத் திறன்களைக் குறைத்து தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைப்பதை நோக்கமாகக் கொண்டவையா, தரைவழிப் படையெடுப்பிற்குத் தயாராவதற்காக முக்கியப் போக்குவரத்து வலையமைப்புகளைச் செயலிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டவையா, அல்லது அன்றாட வாழ்க்கை சார்ந்திருக்கும் உள்கட்டமைப்பைச் சீர்குலைப்பதன் மூலம் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டவையா என்பதை அமெரிக்க விளக்க வேண்டும் என சர்வதேச வல்லுநர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |