ஹோர்முஸ் நீரிணை திறப்பில் உற்றுநோக்கப்பட்ட ஈரானிய யுரேனியம்!
இலங்கையில் சித்திரை புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட கியூ.ஆர் எனப்படும் துரித பதிலளிப்பு குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டு முறை மீண்டும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் பின்னணியில் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கும் சில ஆறுதல் செய்திகள் வந்துள்ளன.
அதில் முக்கிய ஆறுதலாக ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட நகர்வு வந்துள்ளது.
இரண்டாவதாக ரஷ்ய மசகு எண்ணெய் தடைக்கு மே 16 வரை விலக்கு அளிக்கப்பட்ட நகர்வு.
இந்த தளர்வு செய்தி ரஸ்ய எண்ணெய்க்காக ஓடித்திரியும் சிறிலங்காவுக்கும் ஒரு ஆறுதல் செய்தியாகும். ஆனால் இவையெல்லாம் ஆறுதலான விடயம் என்றாலும் இவை நிரந்தரமான ஆறுதலாக வருமா என்றால் அதில் ஐயம் உள்ளது.
ஏனெனில் தமது துறைமுகங்கள் மற்றும்;கப்பல்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால், ஹோர்முஸ் மீண்டும் மூடப்படும் என இன்று ஈரான் தெரிவித்துள்ளது இதேபோல அடிமரிக்காவின் 3 வது விமானந்தாங்கி கப்பலும் மத்தியகிழக்கை நெருக்குகிறது.
இதற்கிடையே நாளை மறுதினம் திங்கட் கிழமை அமெரிக்க ஈரானிய 2 ஆம் கட்ட நேரடிப்பேச்சு இடம்பெறலாமென ஊகிக்கப்படும் பின்னணியில் ஈரானிய யுரேனியத்தை தான் பொறுப்பேற்க தயார் என சீனாவும் அறிவித்த நிலையில் உள்ளுர் மற்றும் உலக விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |