ஈரான் - அமெரிக்கா தாக்குதல் குறித்து ஐ.நா உடனடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
ஈரான் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி சண்டையை நிறுத்திவிட்டு, ராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லை என்றால், மோதல் மேலும் விரிவடையக்கூடும் என்று பொதுச்செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா உடனடி பேச்சுவார்த்தை
மேலும் கடந்த சில மணிநேரங்களில் அதுவே நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதல் சாதகமான முன்னேற்றங்கள் அல்ல, மேலும் இரு தரப்பினரும் சண்டையை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான், கத்தார் மற்றும் பிறரால் முன்னெடுக்கப்படும் மத்தியஸ்த முயற்சிகள் உள்ளிட்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு மீண்டும் திரும்புவதை அவர் உறுதிசெய்ய விரும்புவதாக ஐ.நா பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |