ஈரான் போரால் ஏற்பட்ட பாரிய தாக்கம் : இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் விபரிப்பு
ஈரான் போர் ஒரு "பெரும் விநியோக அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளது என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி தெரிவித்துள்ளார்.
மேலும், அதன் பொருளாதாரத் தாக்கங்களை மத்திய வங்கியாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பெய்லி, வங்கியால் நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதங்களுக்கு இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.
உயர்த்தப்படவுள்ள வங்கி வட்டி விகிதங்கள்
பெப்ரவரி மாதம் வரையிலான ஆண்டில் இங்கிலாந்தின் பணவீக்கம் 3% ஆக இருந்ததாலும், அது 4% என்ற உச்சத்தை நெருங்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்பார்ப்பதாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பணவீக்கத்திற்கான வங்கியின் இலக்கு 2% ஆகும். தனது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில், சர்வதேச நாணய நிதியம், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மிக முன்கூட்டியே உயர்த்துவதற்கு எதிராக எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |