இஸ்ரேலின் ‘ஆபத்தான திட்டம்’ : பிராந்திய நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி தளபதியும், ஈரானின் நலன்புரி மன்றத்தின் உறுப்பினருமான மொஹ்சென் ரெஸாயி, பிராந்தியத்தில் இஸ்ரேல் ஆட்சியின் தீய நோக்கங்கள் மற்றும் எண்ணங்கள் குறித்து பிராந்திய நாடுகளை எச்சரித்தார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ரெஸாயி அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை நோக்கி, இஸ்ரேல் ஆட்சியானது அவர்களின் நிலங்களையும் வளங்களையும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், பிராந்தியம் முழுவதும் மோதலையும் பிளவுகளையும் தூண்ட முயல்கிறது என்று எச்சரித்தார்.
இஸ்ரேல் ஆட்சியின் குறிக்கோள்
“அரபு மற்றும் முஸ்லிம் சகோதரர்களே! உங்கள் பிரதேசங்களையும் வளங்களையும் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், பிராந்தியத்தில் மோதல் மற்றும் பிணக்குகளின் நெருப்பை மூட்டுவதே இஸ்ரேல் ஆட்சியின் குறிக்கோள்,” என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் ஆட்சியின் “ஆபத்தான திட்டத்துடன்” ஒத்துழைப்பது, குறிப்பாகத் தங்கள் திறன்களுக்கு அப்பாற்பட்ட லட்சியங்களைத் தொடர்வோருக்கு, “கடுமையான மற்றும் மோசமான விளைவுகளை” ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
“விழிப்புடனும் விவேகத்துடனும் இருங்கள்,” என்று ரெஸாயி மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |