ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல் : இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால்

United States of America Sri Lanka Navy Imran Maharoof Iran
By H. A. Roshan Mar 24, 2026 10:30 AM GMT
Report

இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான ''IRIS Dena'' மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய தூதுவர் தெரிவித்மை அதிர்ச்சியளிப்பதுடன், இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் இறைமையையும் பாரிய கேள்விக்குறியாக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் முன்வைத்த உண்மைகள் குறித்து இம்ரான் மகரூப் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இடம்பெற்ற 'மிலான்-2026' சர்வதேச கடற்படைப் பயிற்சியின் போது, இலங்கை கடற்படைத் தளபதியால் விடுக்கப்பட்ட நேரடி அழைப்பின் பெயரிலேயே ஈரானியக் கப்பல் இலங்கையை நோக்கி வந்துள்ளது.

நீ பேசாமல் இரு : ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியுடன் கடும் வாக்குவாதம்

நீ பேசாமல் இரு : ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியுடன் கடும் வாக்குவாதம்

காலி நகருக்குத் தெற்கே தாக்குதல் 

எமது நாட்டுக்கு விருந்தினராக வருமாறு ஒரு தரப்பை அழைத்துவிட்டு, அவர்கள் எமது கடல் எல்லைக்கு மிக அருகில் வைத்துத் தாக்கப்படுவதை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது சர்வதேச இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அவமானமாகும்.

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல் : இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் | Iranian Warship Iris Dena Attacked Near Sl Coast

காலி நகருக்குத் தெற்கே சுமார் 40-44 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் கடல் எல்லைக்குள் அல்லது அதற்கு மிக அண்மித்த பகுதியில் மற்றுமொரு நாடு தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவதென்பது நாட்டின் இறைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து அரசாங்கம் ஏன் இன்னும் மௌனம் காக்கிறது? எமது கடற்பரப்பு அந்நிய நாடுகளின் போர்க்களமாக மாறுவதை அரசாங்கம் அனுமதிக்கிறதா?

தூதுவரின் கருத்தின் படி, தாக்கப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் போர் வீரர்களோ அல்லது ஆயுதமேந்தியவர்களோ அல்ல. அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட பேன்ட் வாத்தியக் கருவிகளை இசைக்கும் கலைஞர்கள்.

ட்ரம்பின் பின்வாங்கலுக்கு மத்தியில் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது பாரிய தாக்குதல்

ட்ரம்பின் பின்வாங்கலுக்கு மத்தியில் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது பாரிய தாக்குதல்

தெளிவான விளக்கம் வழங்க வேண்டும்

சுமார் 104 பேரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ள இந்தத் தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். இலங்கையின் அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியதன் மூலம் இந்த உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசாங்கமும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.

தாக்குதலுக்குப் பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்ட 'ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர்' கப்பல் ஏன் இன்னும் அங்கு கொண்டு செல்லப்படவில்லை?

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல் : இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் | Iranian Warship Iris Dena Attacked Near Sl Coast

அத்தோடு, அத்துமீறிய தாக்குதலை நடத்திய அமெரிக்காவுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை எவ்வித எதிர்ப்பையும் பதிவு செய்யாதது ஏன்?

அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையில் காட்டும் பலவீனமும், வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து போவதும் இலங்கையை ஒரு பாதுகாப்பற்ற நாடாக மாற்றியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு உடனடியாகத் தெளிவான விளக்கத்தை நாட்டுக்கு வழங்க வேண்டும். எமது நாட்டின் கௌரவத்தையும், இறைமையையும் அடகு வைக்கும் இத்தகைய செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை: வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023