அமெரிக்க கப்பலை அருகில் சென்று படம் பிடித்த ஈரானின் இரகசிய ட்ரோன்கள்
வளைகுடா பிராந்தியத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றே போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு காரணம் ஈரானை முற்றுகையிடும் வகையில் அமெரிக்கா அனுப்பும் போர்க்கப்பல்களும் அதற்கு எதிராக கடும் தாக்குதல்களை தொடுப்போம் என ஈரான் அச்சுறுத்துவதுமேயாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தமது நாட்டின் மீது என்றோ ஒருநாள் தாக்குதல் நடத்தும் என்று தெரிந்தேஈரான், ரஷ்யா மற்றும் சீனாவிடம் நவீன போர் ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது.
ஈரானை குறிவைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலுக்கு அருகில் சென்று ஈரானிய ட்ரோன் ஒன்று துல்லியமாக படம்பிடித்து வெளியிட்டமை ஈரான் தொழில்நுடபத்தில் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.
இந்தநிலையில் அமெரிக்கா - ஈரான் மோதலுக்கான முன்னோடி திட்டமிடல்கள், அமெரிக்க கப்பல்களை ஈரானின் ஏவுகணைகள் தாக்கினால் அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல்களுடன் வருகிறது இன்றைய உண்மையின் தரிசனம்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |