மன்னார் கட்டுக்கரை குள நிதி நிர்வாகத்தில் முறைகேடு

Mannar Sri Lanka Farmers Issues Sri Lankan Farmers
By Independent Writer May 15, 2026 01:15 PM GMT
Report
Courtesy: Joseph Nayan

மன்னார் மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோகச் சாகுபடி நிலங்களைப் பகிர்ந்தளிப்பதில் நிகழ்ந்துள்ள பாரிய முறைகேடுகள் தொடர்பில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று (15.05.2026) மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த பல வருடங்களாக இந்த ஈவு வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருக்கிறது.

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட 4 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட 4 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

கல்வி அபிவிருத்தி நிதியம்

இந்த வருடம் 32 ஏக்கர் விவசாய பூமி ஏலம் விடப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.

மன்னார் கட்டுக்கரை குள நிதி நிர்வாகத்தில் முறைகேடு | Irregularity Land Allocation Under Katukkarai Pond

இந்தத் தொகை கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அமைப்புக்களால் தங்களுடைய தேவைகளுக்காக , நிர்வாக தேவைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் செலவிடப்பட்டதாக அவர்களால் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் கல்வி அபிவிருத்தி நிதியத்திற்கு மாணவர்களுடைய குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் பல்வேறுபட்ட குளறுபடிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ள போதிலும் ஈவு வழங்குவதிலும் பாரபட்சங்கள் சில இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

ஈரானுடனான போர் : எல்லை கடந்து செல்லும் ட்ரம்பின் பொறுமை

ஈரானுடனான போர் : எல்லை கடந்து செல்லும் ட்ரம்பின் பொறுமை

கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழு

இதற்கு வருகின்ற வருடம் மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் ஏனைய சம்பந்தமான திணைக்களங்கள் முழுமையாக ஒன்றுகூடி, ஒரு பொருத்தமான, ஏழை விவசாயிகளை பாதிக்காத வகையில் ஒரு காத்திரமான திட்ட வரைவு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

மன்னார் கட்டுக்கரை குள நிதி நிர்வாகத்தில் முறைகேடு | Irregularity Land Allocation Under Katukkarai Pond

மேலும், கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவை மாற்றி அமைக்க குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை மாற்றியமைப்பது தொடர்பாகவும் விவசாய அமைச்சருடன் கலந்துரையாடி முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு குழுவாக இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட குழு கடந்த ஐந்து வருடங்களாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த விடயங்களை எதிர்வரும் வருடங்களிலே முழுமையாக சீர் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இங்கு கையாளப்பட்ட நிதிகளுக்கான சரியான கணக்கறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்: விரட்டிப் பிடித்த தந்தை

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்: விரட்டிப் பிடித்த தந்தை

பிரத்யேக மேலாண்மைக் குழு 

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,

“ 2026 ஆம் ஆண்டு பருவ காலத்திற்கு யோத வாவியின் கீழ் விவசாயிகளுக்கு வயல் நிலங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மன்னார் கட்டுக்கரை குள நிதி நிர்வாகத்தில் முறைகேடு | Irregularity Land Allocation Under Katukkarai Pond

மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமேயான பிரத்யேக மேலாண்மைக் குழு ஒன்று கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஏனைய மாவட்டங்களில் இவ்வாறான குழுக்கள் இல்லை.

இந்தக் குழுவின் செயற்பாடுகளில் சில முறைகேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5-6 ஆண்டுகளாக இக்குழுவின் ஊடாகச் சிறு போகச் சாகுபடிக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்ட போது, சில அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வருமானத்திற்காகவும் பெருமளவிலான வயல் நிலங்கள் (சுமார் 25-30 ஏக்கர் வரை) அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஒரு விவசாயிக்கு 13 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், நடைமுறையில் 1, 2 அல்லது 3 ஏக்கர் மட்டுமே பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் தொடர்ச்சியாக நிலம் மறுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, 2026 ஆம் அடுத்த ஆண்டு முதல், விவசாய அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழ் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும்.

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

நெல் கொள்முதல்

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இக்குழுவில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விசாரணை ஒன்றை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் கட்டுக்கரை குள நிதி நிர்வாகத்தில் முறைகேடு | Irregularity Land Allocation Under Katukkarai Pond

2026 சிறுபோக நெல் கொள்முதலுக்காகத் திறை சேரியினால் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது நாட்டில் போதியளவு நெல் கையிருப்பில் உள்ளது. மன்னார் மாவட்டத்தில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக விவசாயிகள் மீண்டும் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தற்போது அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளது. திறை சேரியினால் ஒதுக்கப்பட்ட நிதி தற்போது முடிவடைந்துள்ளது. மன்னார் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மேலதிகமாக 100 மில்லியன் ரூபாய் நிதியை வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையை பெற்றுத் தருவதை உறுதி செய்யத் தேவையான அரசியல் ரீதியான அழுத்தங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள், திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

இலங்கையிலும் குறைவடைந்த தங்க விலை : வெளியான அறிவிப்பு

      

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026