சுரேஷ் சலே குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான சிசிரிவி காட்சிகள்!
இலங்கையின் முன்னாள் இராணுவ உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அவரைச் சித்திரவதை செய்வது போன்ற சிசிடிவி (CCTV) காணொளிகளின் புகைப்படங்கள் சில நேற்றைய தினம் (13.06.2026) சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுச் சிலர் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த பதிவுகளில், இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இராணுவ வீரரை எப்படிக் கொடுமைப்படுத்துகின்றார்கள் எனப் பாருங்கள் எனவும் இராணுவ வீரர்களைக் கொடுமைப்படுத்தித் தாக்குவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால்தான் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தக் கருத்துகளின் பின்னணி குறித்த தொடர்ச்சியான விடயங்களை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |