ஊரடங்குச் சட்டம் நீடிப்பு
இரண்டாம் இணைப்பு
பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று (09) இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (மே - 11) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாளை காலை 7 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் இன்றிரவு 7 மணிமுதல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
