7 முனைகளில் போரை நடத்தி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெருமிதம்
இஸ்ரேல் 7 முனைகளில் போரை நடத்தி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் (Israel)-ஹமாஸ் போரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள காணொளியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா, மேற்குக் கரை பயங்கரவாதிகள், ஏமனின் ஹவுத்திகள் மற்றும் ஈராக்-சிரியா ஷியா போராளிகளின் தாக்குதல்களில் இருந்து எங்கள் நாட்டை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.
இஸ்ரேல் போர்
இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை மீண்டும் வலியுறுத்திய நெதன்யாகு, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயமாக பழிவாங்குவேன்.” என்றார்.
இதேவேளை, இஸ்ரேல் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் நிறைவுபெற்றுள்ளது.
இதனால் மத்தியகிழக்கு பகுதிகளில் போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும், லெபனான் (Lebanon) தலைநகர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் (Israel) , பொதுமக்களை மொத்தமாக வெளியேற உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |